2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!

2000 ரூபாய்  நோட்டுக்கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!

நாடு முழுவதும் புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள  அறிவிப்பில்; 

2017- ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு  முன்பாக  வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலும்  மட்டுமே செல்லும் எனவும், சாதாரணமான பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்துள்ளதாகவும், புழக்கத்தில் உள்ள பிற மதிப்பு நோட்டுகளே மக்களின் தேவைக்கு போதுமானதாக உள்ளது எனவும், இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பபெறப்போவதாக அறிவித்துள்ளது. 

அதன்படி,  'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில்,  2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாகவும் அறிவித்துள்ளது.

எனினும், புழக்கத்திலிருந்து  2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டாலும், அவை வரும் செப்டம்பர் 30 -ம் தேதி வரையிலும் செல்லும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க     } தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி..! 428 மதிப்பெண்கள் பெற்று சாதனை...!

அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும், இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும், ஒருநாளில் 20,000 ரூபாய் மதிப்புமிக்க தொகை வரையிலும்  2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  அதன்படி, பொதுமக்கள் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை 23-ம் தேதி முதல் வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம். 

மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

Demonetisation of Rs 500, Rs 1,000 currency notes had to be done through  legislation: Justice Nagarathna

2016, நவம்பர் 8- ம் தேதி நள்ளிரவு முதல் 1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க     } " திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருகிறது " - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.