ஆடி அமாவாசையொட்டி புனித நீராடிய பக்தர்கள்.. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!!

கிருஷ்ணகிரியில் ஆடி அமாவாசையான இன்று தென் பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையொட்டி புனித நீராடிய பக்தர்கள்.. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றங்கரையில் மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. மூலவர் மாதேஸ்வரன் தெற்கு நோக்கி அருள் புரிவதே இக்கோயிலின் சிறப்பு.

அதனால், இந்த தென்பெண்ணை ஆற்றுக்கு புரட்டாசி, தை, உள்ளிட்ட முக்கிய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். அதன்ப ஆடி அமாவாசையான இன்று திரளான பக்தர்கள் தென்பெண்னை ஆற்றில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேப்போன்று, கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆறு மற்றும் மாயனூர் காவேரி ஆற்றங்கரையோரம் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தேங்காய், பழம், எள், அரிசி படையலிட்டு திதி கொடுத்து வழிபட்டனர்.

இதேப்போல், தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியில் புனித நீராடி பல்லாயிரக் கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

இதனைதொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி, திக்குறிச்சி மஹாதேவர் கோயில்  உட்பட பிரதான நீர் நிலைகளில் அதிகாலை முதலே திரண்ட மக்கள் நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.