கேரள சமாஜம் சார்பில் நடந்த ஓணம் திருவிழா!!!

தருமபுரி கேரள சமாஜம் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பலரும் கலந்து கொண்ட இந்த விழா, நெகிழ்ச்சியாக இருந்தது என அனைவரும் கூறினர்.

கேரள சமாஜம் சார்பில் நடந்த ஓணம் திருவிழா!!!

கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது ஒணம் திருவிழா. கடந்த 8 தேதி  கொண்டாடப்பட்ட இத்திருவிழாவை ஒட்டி தருமபுரி கேரள சமாஜம் சார்பில் இருபதாவது ஆண்டு ஒணம் திருவிழா இன்று தருமபுரியில் சங்க தலைவர் கிருஷ்ணன் உண்ணி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை ஒட்டி மலையாள மொழி பேசும் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.

இவ்விழாவில முக்கிய அம்சமாக மகாபலி சக்கரவர்த்தியாக வேடமிட்ட ஒருவர் வலம் வந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கினார். இவ்விழாவில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் தொழிலதிபர் டிஎன்வி செல்வராஜ், சேலம் மண்டல அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் சிறப்பழைப்பாளராக  கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அதனையடுத்து சமாஜ பெண்கள் அணி சார்பாக கேரளாவின் பாரம்பரிய நடனமான கைகொட்டிகளி, குழந்தைகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட  அனைவருக்கும் 27 வகை பதார்த்தங்கள் அடங்கிய ஓணசத்யா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேரள சமாஜத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.