திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அகவிலைப்படி உயர்வு ஒன்றிய அரசு அறிவித்த தேதி முதல் வழங்க வேண்டும், கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை 50 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தினுடைய மாவட்ட இணை செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

இதில்,அகவிலைப்படி உயர்வு ஒன்றிய அரசு அறிவித்த தேதி முதல் வழங்க வேண்டும்,  70 வயது முடிந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை 50 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

இதையும் படிக்க | தர்மபுரியில் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்.. !

மேலும், மருத்துவ காப்பீடு இல்லா  திட்டத்தை அமுல் படுத்திட வேண்டும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடவேண்டும்,ஒன்றிய அரசு வழங்குவது போல் மருத்துவ படி ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் கோரினர். 

மற்றும், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும்,  குடும்ப பாதுகாப்பு நிதியை ஓய்வூதியர் இறந்த ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் சுமார்  50-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | பற்களை பிடுங்கிய விவகாரம்...ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!