அரசு பேருந்து ஓட்டுநர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்...!

வந்தவாசியில் அரசு போக்குவரத்து பணிமனையை கண்டித்து ஓட்டுனர், குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்...!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தை கண்டித்து ஓட்டுநர் குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி அடுத்த நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ விடுப்பில் இருந்து உள்ளார். இந்த நிலையில் வீரராகவனுக்கு ரூ.21,800 சம்பளம் வழங்குவதற்கு பதிலாக ரூ.17,800 மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் வீரராகவன் போக்குவரத்து பணிமனையில் உள்ள மேலாளரிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்காததால் மனவேதனையில் இருந்துள்ளார். அதனால் ஓட்டுநர் வீரராகவன், அவரது  மனைவி பொற்செல்வி, மகள்கள் விஷ்ணு பிரியா, சாதனா என குடும்பத்துடன் போக்குவரத்து பணிமனை முன்பு அமர்ந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஓட்டுநர் வீரராகவன் போராட்டத்தை கைவிட்டு சென்றார். அதனால் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.