முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின்  பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

இதுகுறித்து பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 18-ம் தேதி மாலை 5. 30 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில்  மாநில  தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில்  திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.