கணவர் பேச்ச கேட்டு தடுப்பூசி போட்டு என்ன கொல்ல போறிங்களா? செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி

எனது கணவர் பேச்சை கேட்டுக்கொண்டு எனக்கு தடுப்பூசி போட்டு கொன்று விட நினைக்கிறீர்களா? என மூதாட்டி ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது....

கணவர் பேச்ச கேட்டு தடுப்பூசி போட்டு என்ன கொல்ல போறிங்களா?  செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வடுகப்பட்டி ஊராட்சியில்  100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று  தடுப்பூசி செலுத்த வேண்டும் என வடுகப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அமுதராணி தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  பொதுமக்களிடையே அறிவுறுத்தி வந்துள்ளனர்.

அப்போது ஒட்டலாம்பட்டி பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வரும் வயதான தங்கம்மாள் மோகன் தம்பதியினரிடம்    தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய போது எனது கணவர் கடந்த 30 ஆண்டுகளாக என்னை விட்டு பிரிந்து வாழ நினைத்து கொண்டு வருகிறார்.

ஆதலால் எனக்கு தடுப்பூசி போட்டு கொன்று விட நினைக்கிறார் என்றும் நான் தடுப்பூசி போடமாட்டேன் என வயதான மூதாட்டி தங்கம்மாள் கூறி மருத்துவ அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி மருத்துவர்கள் மற்றும் வீடுவீடாக சென்று களப்பணியாற்றிவரும் செவிலியர்களை முகம் சுளிக்க வைத்துள்ளதோடு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது ...