தமிழகத்தில் சுங்கச்சாவடி விதிமுறைப்படி செயல்படுகிறதா? - மக்களவையில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!!

தமிழகத்தில் சுங்கச்சாவடி விதிமுறைப்படி செயல்படுகிறதா? - மக்களவையில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!!

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 58 சுங்க சாவடிகளும் உரிய விதிமுறைப்படியே  செயல்படுகிறது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

திமுகு எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி:

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு தான் உள்ளதா? இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான குறிப்பிட்ட தூரம் குறித்தான அளவுகோலை மத்திய அரசு வரையறு செய்து உள்ளதா? என மக்களவையில் திமுகு எம்பி கலாநிதி வீராசாமி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில்:

இதற்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி,2022 ஜூலை 26ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 58 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளதாக குறிபபிட்டார்.. கட்டண விதிகள் மற்றும் ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் கட்டண நிர்ணயம் என்பது மேற்கொள்ளப்படுவதாகவும், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுங்கச்சாவடிகளை அமைக்கப்படுவதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.