கோடநாட்டில் ட்ரோன்கள் பறக்க தடை...

கோடநாடு வழக்கில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ள நிலையில், கோடநாட்டில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோடநாட்டில் ட்ரோன்கள் பறக்க தடை...

கோடநாடு வழக்கில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ள நிலையில், கோடநாட்டில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோடநாடு வழக்கில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கேரளா விரைந்தது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் மரணம் குறித்து 3 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சயானின் மனைவி மற்றும் மகள் மரணம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்தது.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களாக ட்ரோன்கள் பறந்த விவகாரத்தில் நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடநாடு எஸ்டேட் பகுதியில் ட்ரோன்கள் பறப்பதாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் எஸ்டேட் கள ஆய்வாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கவனத்திற்கு செல்ல, கோடநாடு எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஏற்கனவே தடை உள்ள நிலையில் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.