முதலமைச்சரின் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளது...அமைச்சர் முத்துசாமி!

முதலமைச்சரின் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளது...அமைச்சர் முத்துசாமி!

புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளதாக அமைச்சர் முத்து சாமி தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவையொட்டி  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழாவில் சிறப்பு அமைப்பாளராக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 

இதையும் படிக்க : டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்... குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்!

பின்னர் நிகழ்ச்சியில்  சிறப்புரையாற்றிய அமைச்சர் முத்துசாமி, அடித்தட்டில் உள்ள மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல திட்டங்களை யோசித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறை படுத்தி வருவதாக கூறினார்.

அந்த வகையில், அரசு பள்ளியில் படித்து வருகிற மாணவர்கள் கல்லூரிக்கு போகும் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை கொடுக்க வேண்டும் என்று புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளதாகவும், மாறாக கல்லூரியில் சேரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் முத்து சாமி தெரிவித்துள்ளார்.