போதைப் பொருள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…  

Drive Against Drugs என்ற பெயரில் போதைப் பொருள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு வழங்கியது.  

போதைப் பொருள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…   

Drive Against Drugs என்ற பெயரில் போதைப் பொருள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு வழங்கியது.

சமீபகாலமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் (drive against drugs) என்கின்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் பெயரில் இன்று முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணி  துணை ஆணையர் பகலவன் தலைமையில் உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் ஆகியோர் ராயப்பேட்டை பகுதியிலுள்ள வெஸ்லி பள்ளி மாணவர்களை அண்ணாசாலை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்கள்.

இந்த நிகழ்ச்சியில்  போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் அதே போன்று போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை இனம்கண்டு அவர்களிடம் இருந்து போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.