குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து சுதந்திர பாடலை பாடி நடனமாடிய தோடர் சமூக மக்கள்!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு  பாரம்பரிய உடை அணிந்து சுதந்திர பாடலை பாடி நடனமாடிய தோடர் சமூக மக்கள்!!

நீலகிரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தோடர் சமூக மக்கள் பாரம்பரிய நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 



நீலகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும்  குடியரசு தின விழாவின் போது மாவட்டத்தில் உள்ள தோடர், குறும்பர், கோத்தர், இருளர், காட்டு நாயக்கர், பணிக்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால்  இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நடைபெற்றது. உதகை அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தோடர் சமூக பழங்குடி இன மக்கள், அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து, நாட்டின் சுதந்திர பாடலை அவர்கள் மொழியில் பாடி, பாரம்பரிய நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.