செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி!

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

அதே வேளையில், மருத்துவமனையிலேயே அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் தொடரலாம் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:அரிக்கொம்பனை ரவுடியாக சித்தரித்து செய்தி வெளியிட தடைக்கோரிய மனு தள்ளுபடி!