" எடப்பாடி பிரதமர் வேட்பாளராக வர வேண்டும்" - அதிமுக எம்பி தம்பிதுரை.

" எடப்பாடி பிரதமர் வேட்பாளராக வர வேண்டும்" - அதிமுக எம்பி தம்பிதுரை.

அமித்ஷாவின் எண்ணத்துக்கு ஏற்ற நபராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் எனவும்,    கடந்த காலத்தில் ராஜாஜி காமராஜர் மூப்பனார் ஆகியோருக்கு  பிரதமராவதற்கான வாய்ப்பு கிடைப்பதாக இருந்து அவை  தள்ளிப்போனதற்குக் காரணம் திமுக தான் என்றும்,  அமித்ஷா  பேசியதை சுட்டிக்காட்டி,  இது தமிழகத்திற்கு வரவேண்டிய பெருமை என்றும்,  எடப்பாடிதான்  பிரதமர் வேட்பாளராக  வரவேண்டும் என்றும் கூறினார். 
 
மேலும், அதிமுக கட்சி நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தோடு,  ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில்  'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்ததாகவும், அதற்கு ஏற்ப மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பிரதமராக வாய்ப்பு வந்தது காலத்தில் கட்டாயத்தால் அவை மாறிவிட்டது வேண்டும் கூறினார்.  

இதையும் படிக்க       |   ”தமிழுக்கு செய்தவற்றை முதலில் முதலமைச்சர் கூறட்டும்” பா.ஜ.க. மகளிரணி தலைவி பேட்டி!

அதையடுத்து,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும் எனவும்,   40 தொகுதிகளிலும்  வெற்றி பெறுவதே அதிமுகவின்  குறிக்கோள் என்றும்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வர மாட்டார்களா ? என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தமிழர் பிரதமராக ஆக வேண்டும் என்ற  அமித்ஷா கருத்தை வரவேற்பதாகவும்,  அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.  மேலும் அவர், " இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என அமித்ஷா சொல்லிவிட்டார்; தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவார் என தெரியவில்லை;, அப்படி வரும் பட்சத்தில் அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்; ஜெயலலிதா ஆசி பெற்றவர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவருக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளது", என்றும் தெரிவித்தார். 

 இதையும் படிக்க       |  ஹரியானாவில் வலுக்கும் விவசாயிகள் போராட்டம்!