வெயில் எதிரொலி : சென்னையில் உச்சத்தை தொட்ட மின்சார உபயோகம்...!

வெயில் எதிரொலி : சென்னையில் உச்சத்தை தொட்ட மின்சார உபயோகம்...!

சென்னையில் மின்சாரம் நேற்று புதிய உச்சத்தை எட்டியிருப்பதாகவும், இருப்பினும் எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் என்பதால் தமிழ்நாட்டில்   வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன்காரணமாக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் பயன்பாடும்  அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம்; முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ஜெயக்குமார் விமர்சனம்!

இதனால் மின் நுகர்வும்  அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.  இருப்பினும் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில்  இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மின் தேவையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் நேற்று 91.74 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, நேற்று சென்னையின் மின் தேவை 4039 மெகா வாட் ஆக இருந்ததாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது