2 மாதத்தில் நடப்பு நிதி ஆண்டு முடிவு - சொத்துவரி உடனடியாக செலுத்த சென்னை மாநகராடு அறிவுறுத்தல்

2 மாதத்தில் நடப்பு நிதி ஆண்டு முடிவு - சொத்துவரி உடனடியாக செலுத்த சென்னை மாநகராடு அறிவுறுத்தல்

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.சுமார் 5.93 லட்சம் பேர் சொத்துவரியாக ரூ. 346.63 கோடி சொத்து வரி நிலுவைத் தொகையாக வைத்துள்ளனர்.சொத்துவரியினை செலுத்த தவறும் உரிமையாளர்களின் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி, உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
 
சென்னை மாநகராட்சி சட்டப்படி ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி உரிமையாளர்களால் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும்.    தற்போது மாநகராட்சிக்கு சுமார் 5.93 லட்சம் பேர் சொத்துவரியாக ரூ.50,000/-க்குள் நிலுவை வைத்துள்ளனர். இதன் மூலமாக மாகராட்சிக்கு ரூ. 346.63 கோடி சொத்துவரி நிலுவைத் தொகையாக உள்ளது.நிலுவை சொத்துவரியை செலுத்தக் கோரி தபால் மூலமாக தாக்கீது சம்மந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு சார்வு செய்யப்பட உள்ளது.
இவர்கள் தங்களது நிலுவைத் தொகையினை, சொத்து உரிமையாளர்கள் எவ்வித சிரமுமின்றி, எளிதாக செலுத்த  QR Code வசதி தாக்கீதுகளிலேயே அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாமர மக்களின் எட்டாக்கனி பட்ஜெட் - ரஞ்சன் குமார்

மேலும், சொத்துவரியினை வரி வசூலர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி  மற்றும் BBPS (Gpay, PhonePe, Amazon, iMobile pay) ஆகிய  முறைகளில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

சொத்துவரியினை செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மீது  சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி, உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.