பொறியியல் படிப்பு - பட்டியலின மாணவர்களின் சேர்க்கை சரிவு ... காரணம் என்ன.?

தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில் 35ஆயிரத்து 14 பேர் பொறியியல் படிப்புகளில் சேர விண்பித்ததாகவும், ஆனால்,  2020-21ஆம் கல்வியாண்டில்,  17 ஆயிரத்து 518 ஆக எண்ணிக்கை சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும், Post-Matric scholarship வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கல், உதவித்தொகை வழங்குவதில் சிக்கல், கல்விக்கட்டணத்தில் சலுகை தருவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களே பட்டியலின மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.  எனவே இந்த சிக்கல்களை தமிழ்நாடு அரசு களைய வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.