ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்!

 ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்!

திருப்பத்தூரில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ்  குழந்தைகளுக்கு  மாவட்ட ஆட்சியர் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்  வழங்கியுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். 

இத்திட்டத்தின் கீழ், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு  நான்கு பிஸ்கட்கள் தலா 15 கிராம் வீதம் 60 கிராமும்  இரண்டு வயது முதல் 6 வயது உடைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு  இரண்டு பிஸ்கட்கள் தலா 15 கிராம் வீதம்  30 கிராமும்   வழங்கப்பட வேண்டும். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் ஆறு மாதம் முதல் இரண்டு வயது உடைய 400 குழந்தைகளும் இரண்டு வயது முதல் ஆறு வயது உடைய 449 குழந்தைகள் என மொத்தமாக 849 குழந்தைகள் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெற்று பயன் பெறுவார்கள்.  

நிகழ்ச்சியில் மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செந்தில்குமார் , வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி,   துறை சார்ந்த அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,  குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க: டாஸ்மாக் கடை மூடல் - பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!