"தெய்வமே எங்கள காப்பாத்து கோடநாடு மேட்டருக்காக ஆளுநரிடம் ஓடிய  இபிஎஸ்-ஓபிஎஸ்"...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர்.

"தெய்வமே எங்கள காப்பாத்து கோடநாடு மேட்டருக்காக ஆளுநரிடம் ஓடிய  இபிஎஸ்-ஓபிஎஸ்"...

கோடநாட்டில்  நிகழ்ந்த கொலை கொள்ளை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சட்டசபையிலும் இது புயலை கிளப்பியது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 3வது நாளாக நேற்று நடைபெற்றது. 

 அதிமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், நேற்று பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது என்று பேசினார்.

இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கோடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது என்று கூறினார். கொடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். 

முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கொடாநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ச் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், பொய் வழக்கு போடாதே என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜனநாயகத்தில் எதிர்கட்சியினரை தனது அதிகார பலத்தால் எதிர்கட்சியினரை நசுக்க வேண்டும் என்று தவறான கொள்கையை திமுக கையில் எடுத்துள்ளது. துரிதமாகப் பொய் வழக்குகளைப் போட்டு அதிமுகவினரை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தராத போக்கு தொடர்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அவர், திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் கையில் எடுத்துள்ளது. என்னையும் சில அதிமுக நிர்வாகிகளையும் அந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினார். சாத்தியமா?.. அதுவும் 8 மாசத்தில்?.. அனைவருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து இன்று ஆளுநரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் கொடநாடு விவகாரம் குறித்து முக்கிய விஷயங்கள் இபிஎஸ்-ஓபிஎஸ் பேசியதாக தெரிகிறது.