மார்பக புற்றுநோய் குறித்து அனைவரும் பேசுங்க- கிருத்திகா உதயநிதி  

மார்பக புற்றுநோய் குறித்து அனைவரும் பேசுங்க- கிருத்திகா உதயநிதி   

மார்பக புற்றுநோய் குறித்து வீட்டில் அனைவரும் பேச வேண்டும் என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பைக்கத்தான் (பைக் மாரத்தான்) சென்னை சாந்தோமில் தொடங்க உள்ளது. காவேரி மருத்துவமனை நடத்தும் இந்த நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, பின்னனி பாடகர் அனுராதா ஸ்ரீராம், டிக்டாக் பிரபலம் சசிலேயா உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழிப்புணர்வு பைக்கத்தானை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 முன்னதாக மேடையில் பேசிய கிருத்திகா உதயநிதி, நான் கடந்த வாரம் கோவை மருத்துவமனை சென்றேன். முதல் தடவை மார்பக புற்றுநோய் நிகழ்வில் பங்கேற்றேன். புற்றுநோய் என்றால் பயம் உள்ளது. அதான் பரிசோதனைக்கு தாமதமாக சொல்கிறார்கள். புற்றுநோய் என்ற வார்த்தையை நார்மல் ஆக்க வேண்டும். ஆண்கள் இதில் பங்கேற்க வேண்டும். பேச வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் முக்கியமான ஒன்று காவேரி மருத்துவமனைக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.