டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குழப்பம்... தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குழப்பம்... தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2ஏ முதன்மை தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. 

அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.  அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.  இதற்காக சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை 32 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் தெரிந்துகொள்க:  தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு... !!

இந்நிலையில் சென்னையில் துரைப்பாக்கம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  பதிவெண் குழப்பம் காரணமாக, 30 நிமிடங்களாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த குழப்பமான சூழலில் தங்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படுமா என்ற கேள்வி பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கிடையே ஏற்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.  அதாவது தேர்வு தாமதமாக தொடங்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நிறைவடையும் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம்...!!