பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு...மத்திய அரசு அறிவிப்பு

தீபாவளியை முன்னிடு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு...மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசலின் விலை நூறைத் தாண்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 66 பைசாவுக்கும், 1 லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பொதுமக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.