அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரே... சசிகலாவின் பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு!

சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளரே என அச்சிடப்பட்டு சென்னையில் ஒட்டப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரே...  சசிகலாவின் பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு!

ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளை எளிமையான முறையில் தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று சசிகலா வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பல்வேறு அமமுக, நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு பிறந்தநாள் போஸ்டர்கள் அடித்து ஒட்டி உள்ளனர்.

சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், அஇஅதிமுக-வின் நிரந்தர பொது செயலாளரே என்றும், சசிகலா தலைமையில் தேர்தலை சந்தித்தால் மட்டுமே வரும் உள்ளாட்சி தேர்தல், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியும் என அந்த போஸ்டர்களில் வாசகம் இடம் பெற்று இருந்தது. அதேபோல

சிறுநரிகளை சிதறடித்த சிம்மாசனமே

விரல் விட்டு எண்ணும் துரோகிகளை விடுங்கள்

கோடிக்கணக்கான தொண்டர்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்

என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ள சசிகலா பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன