"40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" சீமான் தகவல்!

"40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" சீமான் தகவல்!

நாடளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் போட்டியிட உள்ளோம், யாருடனும் கூட்டணி அமைக்காது, தனித்து போட்டியிட உள்ளோம் என கோபிசெட்டிபாளையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியினர், கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது, மத்திய அரசு வீட்டு உபயோகப் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளது. எந்த பொருட்களின் விலையையும் மத்திய அரசால் குறைக்க முடியும். தற்போது அரிசி, பருப்பு, எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்துதான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். அதே போல வளர்ச்சி நோக்கி தான் திட்டங்களும் செல்ல வேண்டும். தற்போது உள்ள இந்த மத்திய அரசை கொடுங்கோன்மை எனத்தான் சொல்ல வேண்டும். தன்னலமற்ற சர்வதிகாரி என சொன்னால் பெருந்தலைவர் காமராஜ் போன்றவர்கள் தான் அவர்கள் மக்களைப் பற்றி தான் சிந்தித்தார்கள். ஆனால் மத்திய அரசோ தேர்தலை நோக்கித்தான் நகர்கிறது என தெரிவித்தார். 

இவர்கள் மக்களை ஏமாற்றுவதே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஏதோ ஒரு தொகுதியில் நின்று தேர்தலை சந்திக்க தயார், என்னைவிட பிஜேபினர் ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா? நாங்கள்  40 இடங்களிலும் போட்டியிட உள்ளோம்,  யாருடனும் கூட்டணி அமைக்காது, தனித்து போட்டியிட உள்ளோம் என தெரிவித்தார்.  

மேலும், சந்திரயானில் காற்று, தண்ணீர் இருக்கின்றதா என ஆய்வு செய்கின்றனர். ஆனால், பூமியில் காற்று தண்ணீர் இருக்கிறதா? என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க: இழப்பீடு கேட்டு வழக்கு; என்.எல்.சி.யை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு !