ஈரோட்டில் நடந்த எக்ஸ்போ!!! கோலாகலமாக நடந்த ஆடைகள் கண்காட்சி!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாங்க ஈரோடு டெக்ஸ்வேலியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர ஜவுளி வியாபாரிகள் பங்குபெறும் அகில இந்திய அளவில் நடைபெறும் TAG EXPO  ஜவுளி கண்காட்சி.

ஈரோட்டில் நடந்த எக்ஸ்போ!!! கோலாகலமாக நடந்த ஆடைகள் கண்காட்சி!!!

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர உள்ளதால், பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜவுளி வியாபாரிகள் தங்களது ஜவுளிகளை சந்தைப்படுத்தும் வகையில்,  ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவான டெக்ஸ்வேலியில் TAG EXPO என்ற ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்திய ஜவுளி அமைச்சம் மற்றும் தமிழக ஜவுளி அமைச்ச ஆதரவுடன் சுமார் 20 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஜவுளி பூங்காவில்,  இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  சிறு, குறு, நடுத்தர ஜவுளி வியாபாரிகள் முதல் வெளிநாட்டு மிகப்பெரிய பிராண்ட் நிறுவனங்கள்  வரை   5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள்  கலந்து கொண்டு, பட்டு, பேன்சி சேலைகள், துணி வகைகள், ரெடிமேட் ஆடைகள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் உட்பட, தங்களது ஜவுளிகளையும், புதிய ஆடை வடிவமைப்புகளையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனர்.

இதில் 150 க்கும் மேற்பட்ட  கொள்முதல் வணிகர்கள் சங்கங்கள் உட்பட அண்டை மாநிலங்கள் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் வரை ஏராளமான வியாபாரிகள் கலந்துகொள்வார்கள் எனவும், 300 கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளிகள் விற்பனையாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.