ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி மேம்பாட்டு குழு... தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படும்...

தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதத்ரவிட்டுள்ளார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி மேம்பாட்டு குழு... தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படும்...

தமிழ்நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்தும் விதமாக மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் நிதித்துறை, தொழில்துறை, வேளாண்துறை, கால்நடைத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய ஆறு துறைகளின் செயலாளர்கள் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.  

மேலும் தொழில்துறை செயலாளர் தலைமையில் ஒரு நிர்வாக துணைக்குழு செயல்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும் என்றும், 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.