தீயணைப்புத் துறை சார்பில் தீ விழிப்புணர்வு பிரச்சாரம்!!!

தீயணைப்புத் துறை சார்பில் தீ விழிப்புணர்வு பிரச்சாரம்!!!

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக  தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தீ விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

"தீ தொண்டு நாள்" வாரத்தையொட்டி (ஏப்ரல் 14 - 20) "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ; தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சி" என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம். 1944 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 தீயணைப்பு வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 3000 - திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

எனவே ஏப்ரல் 14ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரித்து வருகிறது. இதை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இந்தியா முழுவதுமாக தீ தொண்டு வாரமானது அனுசரிக்கப்படுகிறது.

இந்த தீ தொண்டு வாரத்தில் பள்ளிகள் கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல் தீ தடுப்பு பிரச்சாரங்கள் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | அதிமுக - வை எவன் பேசினாலும் பதிலடி தருவோம் - : செல்லூர் ராஜு ஆவேசம்

அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ரங்கநாதன் தெருவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக  தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இசைமேளக் குழுவினருடன் துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீ விழிப்புணர்வு குறித்த பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தீ தொண்டு நாள் வாரத்தை ஒட்டி "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சி" என்ற கருப்பொருளில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு  பிரச்சாரத்தில் தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்