மலைபோல் குவிந்துள்ள ராட்சத நுரை... துர்நாற்றத்துடன் பொங்கும் நுரையால் மக்கள் அவதி...

ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், மலைப்போல் குவிந்துள்ள ராட்சத நுரையால் 2-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மலைபோல் குவிந்துள்ள ராட்சத நுரை... துர்நாற்றத்துடன் பொங்கும் நுரையால் மக்கள் அவதி...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 563 கனஅடியாக இருந்தபோதும், அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 3 ஆயிரத்து 60 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மழைக்காலங்களில் கர்நாடகா மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் ஆற்றில் வெளியேறும் நிலையில், துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியான நுரை பொங்குகிறது. இந்நிலையில், ஒசூர் - பேரிகை சாலை செல்லக்கூடிய தரைப்பாலம், நுரைகள்  மலைப்போல் குவிந்திருப்பதால் இரண்டாவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், தட்டகாண பள்ளி, சித்தனப்பப்ளி, நந்திமங்கலம், பேரிகை உள்ளிட்ட பகுதி மக்கள்  வெளியே செல்லமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்காதவாறு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.