தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை...! கோரிக்கை விடுத்த மருத்துவர்கள் சங்கம்...!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை...!   கோரிக்கை விடுத்த மருத்துவர்கள் சங்கம்...!

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்ததற்கு, குழு அமைத்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

சென்னை சேப்பாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறுவது, அரசு சார்பில் வீடு மற்றும் நிதி வழங்கியது வரவேற்கதக்கதாகும். வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த சம்பவம் குறித்து குழு அமைக்கப்பட்டு முழுமையாக  விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார்.  

மேலும் படிக்க : கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழப்பு...! விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!

மேலும், இது போன்று சம்பவம் நடைபெற்ற பிறகு குறிப்பிட்ட நபர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன் முடிந்து விடக்கூடாது, குழு அமைத்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்  கவனக்குறைவினால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. முக்கிய காரணமாக மருத்துவர்களுக்கு பணி சுமை அதிகமாக இருந்தால் கவனக்குறைவுகள் அதிகரிக்கும் எனவும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு ஏற்றவாறு மருத்துவர்களையும், செவிலியர்களையும் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், அறுவை சிகிச்சை செய்வதற்கு விதிமுறைகளை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் தனியாக உருவாக்க வேண்டும். மருத்துவர்களுக்கு 24 மணி நேரமும் பணிகள் வழங்க கூடாது. அது அவர்களின் உடலையும் மனதையும் சோர்வடை வைக்கிறது. எனவே அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க : களமிறங்கிய மனித உரிமை ஆணையம்..! கால்பந்து வீராங்கனை மரணம்..!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைக்கிறார்கள். மருத்துவ காப்பீடு மூலம் வருவாய் ஈட்டுவதற்கு இதுபோன்று நடைபெற்று வருகிறது. இதனால் பெரிய அளவு வசதி இல்லாத மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இது நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்  மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை வழங்காமல் அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : காதல் விவகாரம் தான் காரணமா? மாணவர்கள் தாக்கிகொள்ளும் வீடியோ வைரல்!