நகை, மணல் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறு: கே.சி.வீரமணி விளக்கம்...

லஞ்ச ஒழிப்புச் சோதனையில் நகை, மணல் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கமளித்துள்ளார். 

நகை, மணல் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல்  தவறு: கே.சி.வீரமணி  விளக்கம்...

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 7 மணி தொடங்கி சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இன்று திருப்பத்தூர் தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வீரமணி சோதனை முடிவில் மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் சென்றிருப்பதாக கூறினார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்த சோதனை நடைபெற்றதாக கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிக்கை குறிப்பு முற்றிலும் பொய்யானது என விளக்கமளித்துள்ளார்.