மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ்.. முக்கிய அறிவிப்பு!!

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ்.. முக்கிய அறிவிப்பு!!

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பயண அட்டைகள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் ஜூன் 21 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்பித்து, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் இந்த டோக்கன்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுப்பிக்க வருபவர்கள் தங்களது முந்தைய பயன அடையாள அட்டையை கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.