திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்- தொடங்கி வைத்தார் ஸ்டாலின்  

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்- தொடங்கி வைத்தார் ஸ்டாலின்   

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக திருக்கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக  கடந்த 2002 ஆம் ஆண்டு அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி 754 திருக்கோவில்களில் மதிய வேளைக்கு மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் மற்றும் பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டம் விரிவுப்படுத்தபடும் என்று சட்டபேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி இன்று முதல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் ஆகிய கோவில்களிலும் நாள் முழுக்க அன்னதானம் வழங்கப்படும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

3 கோவில்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த கோவில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், மற்றும் தக்கார்கள், நிர்வாக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் நடைபெற்ற அன்னதான தொடக்க நிகழ்ச்சியில் தமிழக மீனவளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணன், கோவில் தக்காரும், மாலைமுரசு நாளிதழ், தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநருமான இரா.கண்ணன் ஆதித்தன், ஆகியோர் கலந்து கொண்டனர். சாம்பார், ரசம், மோர், இனிப்பு வகைகளுடன் சுடச் சுட பரிமாறப்பட்ட உணவை பக்தர்கள் உண்டு மகிழ்ந்தனர்.