கள்ள நோட்டு அச்சிடித்த கும்பல் கைது- கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் இயந்திரம் பறிமுதல்

செங்கல்பட்டு அருகே கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கள்ளநோட்டுகள் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ள நோட்டு அச்சிடித்த கும்பல் கைது- கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் இயந்திரம் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் அதே பகுதியை சேர்ந்த ரகு மற்றும் மாமண்டூர் பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் எபனேசர் ஆகியோருக்கு கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டை வாடகைக்காக கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் வீட்டில் தங்காமல் தொடர்ந்து வீடு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

வாடகைக்கு கொடுத்த வீட்டில் தங்காமலும், வீட்டிற்கு வாடகை கொடுக்காமலும் இந்ததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பாபு, இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், ராஜ் மற்றும் எபனேசரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டின் வாடகை கொடுங்கள் அல்லது வீட்டை காலி செய்துவிட்டு வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள் என எச்சரித்துள்ளனர்.

காவலரின் எச்சரிக்கைக்கு பின் ராஜ் மற்றும் எபனேசர் அவசர அவசரமாக வீட்டை காலி செய்வதையறிந்த காவல்துறையினர் சம்பவ் இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு 3 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்   மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ளநோட்டுகள் அடிப்பதற்கான அனைத்து உபகரணங்கள் 5 லட்சத்திற்கான போலி 500 ரூபாய் அச்சடித்த தாழ்கள் சிக்கின. 

இவை அனைத்தையும் கைப்பற்றிய போலீசார் ராஜ், எபினேசர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.