#GoBackStalin டிரெண்ட் பண்ணது உ.பி, மகாராஷ்டிரா பாஜகவினர்..!! அம்பலமானது நம்பர் 1 அவலம்...

வட இந்திய மாநிலங்களில் உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா பிஜேபி ஐடிவிங் கோவை மக்கள் டுவீட் செய்வது போல GoBackStalin ஹேஷ்டேக் போட்டு போலியாக டுவீட் செய்து தேசியளவில் டிரெண்ட் செய்தது தெரியவந்துள்ளது.

#GoBackStalin டிரெண்ட் பண்ணது உ.பி, மகாராஷ்டிரா பாஜகவினர்..!! அம்பலமானது நம்பர் 1 அவலம்...

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக குறைத்தாலும், தமிழகத்திலேயே கோவையில் மட்டும் நிலைமை மோசமாக உள்ள நிலையில் நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு கொரோனா நோயாளிகளிடம் அவர்களிடம் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் அன்பாக கேட்டறிந்தார். 

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், #GoBackStalin ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.  பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்ட் ஆனதைப் போல, முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதுவும் சொந்தமாநிலத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்து இது தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. #GoBackStalin 1.31 லட்சம் டிவீட்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல பாஜகவினர் பலரும் Go Back Stalin ஹேஷ்டேக்கில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் போட்டனர்.

இந்த நெருக்கடியான கொரொனா காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்தனர் பிஜேபியினருக்கு திமுகவினருக்கு பதிலடி கொடுக்காமல் இல்லை, இதை எதிர் கொள்ளும் வகையில், முதலமைச்சர் பிபிஇ சூட் அணிந்த வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டு திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர். அதுவும் WestandwithStalin என்ற ஹேஷ்டேக் மட்டுமே சுமார் 3.50 லட்சம் டிவீட்களோடு மொத்தமாக பின்னுக்கு தள்ளி முந்தியது. காலையிலிருந்து கஷ்டப்பட்டு டிரெண்ட் பண்ண அத்தனையையும் #Welcome_TNCM_Stalin, #WelcomeStalin, WestandwithStalin ஹேஷ்டேக் பயன்படுத்தி சோலியை முடித்தனர்.  

இப்படி கோவை பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கோவை மாவட்டத்தை எந்த காரணத்துக்கும் புறக்கணிக்கப்படவில்லை என பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, போடாதவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் நாங்கள் பார்ப்பது கிடையாது. தேவைப்பட்டால் இரண்டு நாட்கள் கழித்துக் கூட கோவைக்கு வருவேன்” என்றார்.

gobackstalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது குறித்து சமூக வலைதளத்தில் ஜோயல் என்பவர்... gobackstalin ட்ரெண்ட் செய்தவர்கள் பெரும்பாலும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், உத்தரப்பிரதேசம் ட்ரென்ட்ஸ்ல் ஹாஷ்டேக் கோ பேக் ஸ்டாலின் என்று முதலிடத்திலும், மகாராஷ்டிரா ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திலும் வந்தது. ( # GoBackStalin has showed No.1 in Uttarpradesh Trends and No.2 in Maharashtra Trends ), வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் டிவிட் செய்துள்ளனர், எனவே கோவை மக்கள் யாரும் gobackstalin ஹேஷ்டேக் போடவில்லை என கூறியுள்ளார்.