" Google CEO ஆனாலும் ஜாதி பெயர் பின்னால் வரும்.." - எம்.பி. கனிமொழி சாடல்..!

" Google CEO ஆனாலும் ஜாதி பெயர் பின்னால் வரும்.." - எம்.பி.  கனிமொழி  சாடல்..!

மதத்திலிருந்து கூட விடுபட்டு விடலாம் ஆனால் ஜாதியை விட்டு வெளியே வர இயலாது என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70 ஆவது ஆண்டுவிழாவில்  திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம் பி மற்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினர். 

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேடைப் பேசியதாவது:-  

" அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொள்ளாதவர்கள்,அதனை எங்களால் ஜீரணிக்க முடியாது என்று சொன்னவர்கள் தான் இன்று அதனை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி அடிக்கடி சொல்ல கூடிய இரண்டு பெயர்கள் தீன் தயாள்,சாவர்க்கர் இருவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்தவர்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொள்ள மாட்டேன் என்று கூறியவர்கள் களை தலைவர்களாக ஏற்று கொண்டவர்கள் தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள்".
 
'"நாடாளுமன்றத்தில் எந்தவிதமான விவாதத்திற்கும் இடம் இல்லை. எந்த ஒரு சட்டத்தையும் அவர்களே இயற்றும் அளவுக்கு தனி பெரும்பான்மையுடன் இருக்கிறார்கள். யாருக்கு இட ஒதுக்கீடு என்கிற அடிப்படையை மாற்ற நினைக்கிறார்கள். அதற்கு முதற் படி தான் EWS. 

Google CEO ஆனாலும் ஜாதி பெயர் உங்கள் பின்னால் வரும். மதத்தில் இருந்து கூட விடுபட்டு விடலாம் ஆனால் ஜாதியை விட்டு வெளியே வர இயலாது 

முதலில் இருந்தே பாஜகவால் இட ஒதுக்கீடு முறையை ஏற்று கொள்ள முடியவில்லை. ஜனநாயகத்தின் மீது,மக்கள் மீது அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜவிர்க்கு என்ன மரியாதை இருக்க முடியும்?  மிகப் பெரிய தாக்குதல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது, அதை பற்றி பேச கூடிய ஒருவர் பேசாமல் தன் பெருமையை பேசி கொண்டு இருக்கிறார். இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிற ஒரு சூழல் தான் உள்ளது... அதை கூட செவி கொடுத்து கேட்க தயாராக இல்லை. இதற்க்கு காரணம் மத அடிப்படையில் அவர்களுக்கு உள்ள காழ்புணர்சிகள் தான் என்றால் அது மிகை இல்லை. 

பாஜக ஆளும் மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். மத மாற்ற தடை சட்டத்தை நாமும் பார்த்து உள்ளோம் அதை தூக்கி எரிந்து உள்ளோம். மத மாற்ற தடை சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம். 

அரசியலமைப்பு சட்டத்தை பிடிங்கி கொண்டால் நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் எதிர்கட்சிகள் எந்த அளவிற்கு அச்சுறுத்தபடுகிறது...எதிர்கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது தான் நம் எதிர்கால அரசியல் கடைமை என பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்கள்.

மேடையில் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு உள்ளனர். மத்திய அரசின் துறைகளை கைகளில் வைத்துக்கொண்டு அச்சுறுத்த நினைக்கிறார்கள்.

தமிழகத்தையும் திமுகவையும் அச்சுறுத்த முடியாது பாஜகவை அச்சுறுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வில்லை, நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என தெரிவித்தார்.

இதையும் படிக்க    | "முதலீடு செய்ய வாங்க" எலான் மஸ்க்கை அழைக்கும் கர்நாடக அமைச்சர்!