கட்டுமானப் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!

அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுமானப் பொருட்களின் விலைப்பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 

கட்டுமானப் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!

பொதுப்பணித்துறையின் மூலம் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்துறை, நீதிமன்றம், போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான தேவையான அலுவலகங்கள் கட்டித் தரப்படுகிறது. 

நீர்வளத்துறை மூலம் புதிதாக அணைகட்டுகள் கட்டுதல், அணைகள் ஏரிகள் புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 2021-2022ம் ஆண்டுக்கான கட்டுமான பொருட்களின் புதிய விலைப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஒரு மெட்ரிக் டன் ஸ்டீல் ரூ.51,750 ஆகவும், ஒரு மெட்ரிக் டன் சிமெண்ட் ரூ. 5,960 ஆகவும், 1000 செங்கல் விலை ரூ. 7,695 ஆகவும் மணல் ஒரு யூனிட் ரூ.447 ஆகவும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனாருக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.861, சித்தாள் ரூ.718 ஆக ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.