10 ஆண்டுகளில் தமிழக அரசு  ஒரு புரட்சியை  உருவாக்கும்.. அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை..

10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு  ஒரு புரட்சியை  உருவாக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளில் தமிழக அரசு  ஒரு புரட்சியை  உருவாக்கும்.. அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை..

சட்டப்பேரவையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த எம் ஆர் கே பன்னீர்செல்வம், உழவர் நல வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு 3,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருவதாக கூறினார்., வாழை மற்றும் மஞ்சள் பயிர்களை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, திமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் கேட்டு வங்கி முன் நிற்காத சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

கரும்பு, நெல், கீரை பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு தரப்பினருக்கும் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்து தனியார் சர்க்கரை ஆலைக்கான நிலுவைத்தொகைகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசு திமுக அரசு என கூறிய அவர், பத்தாண்டுகளில்  வேளாண் துறையில் ஒரு புரட்சியை தமிழ்நாடு அரசு உருவாக்கும் எனவும் உறுதியளித்தார்.