குட்செட் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்..!

குட்செட் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்..!

திருச்சியில் ரயில்வே குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெளி மாநிலத்தில் இருந்து வந்த கோதுமையை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே குட்செட்டில் லாரி நிறுத்துவதற்கு பாதுகாப்பான இடவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் 10-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, அப்போதைக்கு சரக்குகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வைத்தனர். ஆனால் அதன் பின்னர் கோரிக்கை குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.  

இதனால் அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 450-க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்கு ரயிலில் வந்துள்ள கோதுமையை மத்திய அரசின் கிடங்குக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தக்காரர்கள் மீண்டும் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/BJP-Emerges-as-a-Disruptive-Force-for-AIADMK--A-View-from-2014-to-2022

பாதுகாப்பான வாகன நிறுத்தகம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து பேட்டரி மற்றும் உதிரிப் பொருட்கள் திருடு போவதாக கூறும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.