மருத்துவ கழிவுகள் தீயிட்டு கொளுத்துவதால் பாதிப்பு..!

மருத்துவ கழிவுகள்  தீயிட்டு கொளுத்துவதால் பாதிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இஎஸ்ஐ மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை, டானிக், பிளாஸ்டிக் ஊசி, மற்றும் மருத்துவ கழிவுப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் குடியிருப்பு வாசிகளும், எட்டையாபுரம் சாலையில் பயணிப்போரும் கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணறல், வாந்தி, உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் அமைந்துள்ள 
இஎஸ்ஐ மருத்துவமனையில் காலாவதியான மருந்து பொருட்கள், பிளாஸ்டிக் ஊசி, மற்றும் மருத்துவ கழிவு பொருட்களை ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இரண்டு அடி குழி தோண்டியும், காலியிடங்களில் குவித்து வைத்தும் தீயிட்டு அளித்து வருகின்றனர்.
இந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் கிழக்குப் பகுதியில் பழனியாண்டவர் கோவில் தெரு குடியிருப்புகளும், மேற்கு பகுதியில் கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டும், தெற்கு பகுதியில் எட்டையாபுரம் முக்கிய சாலையும், வணிக கட்டிடங்களும், வடக்கு பகுதியில் காவல்துறை குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளது.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது காலாவதியான மருந்துகளை கொளுத்தி விடுவது இம் மருத்துவமனையில் வாடிக்கையாக உள்ளது இதனால் அப்போதி மக்கள் பலமுறை அவர்களிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவித்தும் இதுவரை அவர்கள் இச்செயலை நிறுத்துவதாக தெரியவில்லை இதனால் பலர் புகையால் கண் எரிச்சல், வாந்தி, தலைச்சுற்றல், உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.