புள்ளிங்கோவாக உலா வந்த பள்ளி மாணவர்கள்: சொந்த செலவில் முடி வெட்டிவிட்ட தலைமை ஆசிரியர்...

வேலூரில் புள்ளிங்கோவாக உலா வந்த பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் முடி வெட்டிவிட்ட தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

புள்ளிங்கோவாக உலா வந்த பள்ளி மாணவர்கள்: சொந்த செலவில் முடி வெட்டிவிட்ட தலைமை ஆசிரியர்...

வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள்  தங்கள் இஷ்டம் போல் முடிவெட்டி கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்துள்ளனர். இதையறிந்த தலைமை ஆசிரியர் நெப்போலியன், மாணவர்களை அழைத்து முடி திருத்தி வரும்படி ஒரு வார காலம் அவகாசம் தந்துள்ளார். இதனை மாணவர்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டு முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்துள்ளனர்.  இதையடுத்து  முடித்திருத்தம் செய்பவர்கள் இரண்டு பேரை வரவைத்து தன் சொந்த செலவில் புள்ளிங்கோவாக மாறிய தன் மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்து ஒழுங்கு படுத்தினார் தலைமையாசிரியர் . 

இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 900 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியர் நெப்போலியன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.  மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.