தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கடும் குளிர்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கடும் குளிர்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து கடும் குளிர் மற்றும் பனி நிலவி வருகிறது. வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27, 28-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும் என்றும், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.