வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை...வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை...வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக மக்களை வாட்டி வந்தது.  இந்தநிலையில், நேற்றிரவு பூந்தமல்லி, கரையான்சாவடி,  போரூர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலைகளில் ஓடிய மழை நீரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்தநிலையில், திருவள்ளூரில் இருந்து பெண்ணலூர் பேட்டை பகுதிக்கு  சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணிகள் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்தனர்.