அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..   

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று  வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

 மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.