அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடு தண்ணீர்.. பாதையை மணல் மூட்டையை கொண்டு அடைத்த மீனவர்கள்!!

வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடு தண்ணீர் வரும் பாதையை பைபர் படகுகள் மூலம் மணல் மூட்டையை கொண்டு அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடு தண்ணீர்.. பாதையை மணல் மூட்டையை கொண்டு அடைத்த மீனவர்கள்!!

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆறும் கடலும் கலக்கும் இடத்தில் ஏராளமான மீன்களும் நண்டுகளும் மட்டுமின்றி இறாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த பகுதியில் தாழங்குப்பம் ,நெட்டுகுப்பம், காட்டுகுப்பம், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில்  வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுதண்ணீர், சாம்பல் கழிவுகளால்  நண்டு, இறால், மீன்கள் அழிந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வடசென்னை அனல் மின் நிலைய கழிவை ஆற்றில் விடுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுகுப்பம். எண்ணூர் குப்பம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகளில் மூலம் போராட்டம் நடத்தினர். சுடு தண்ணீர் வரும் பாதையில் மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர். இதையோட்டி அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால்  பரபரப்பு  நிலவியது.