நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்கப்படும்- எம்.எல்.ஏ.பரந்தாமன்  

சென்னை எழும்பூர் நடைபாதை அருகில் வசித்து வந்த மக்களுக்கு 30 நாட்களுக்கும் போர்க்கால அடிப்படையில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.  

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், நடைபாதையில் வசித்துவந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பாக இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார். வீடு இல்லாத நபர்களிடம் மனுக்களை பெற்று மாநகராட்சிக்கு அனுப்பி உள்ளேன் என்றும் அதன் தொடர் நடவடிக்கையாக அவர்களுக்கு வீடு வழங்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது என்றார். சாலையில் வசிப்பதால் உரிய கணக்கெடுப்பு எடுக்க முடியாத சூழல் உள்ள காரணத்தினால் தங்கும் விடுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் முறையான பட்டியலை தயார் செய்து போர்க்கால அடிப்படையில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மிக விரைவில் வீடுகளை வழங்க வேண்டும் என்பதுதான் அரசு மற்றும் மாநகராட்சியிம் திட்டம் என்று கூறிய அவர் உணவு தேவையான கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் காலங்காலமாக மழை காலத்தில் தவித்தார்கள் என்பதற்காக இந்த மழை காலத்திலும் அவர்களை விட்டுவிட முடியாது என்பதற்காகவே தான் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும்  30 நாட்களுக்குள் அவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டியதற்கான கோப்புகள் நகர்ந்து கொண்டிருக்கிறது.  போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடக்கும் என உறுதி அளித்தார்.