மனைவியை மீட்டுத்தாங்க- மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

காதல் திருமணம்  செய்துகொண்ட பெண்ணை கணவரிடம் இருந்து முறைப்படி திருமணம் செய்து தருவதாக கூறி   அழைத்துச் சென்ற பெண் வீட்டாரிடம் இருந்து மனைவியை மீட்டுத் தரக்கோரி கணவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

மனைவியை மீட்டுத்தாங்க- மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

காதல் திருமணம்  செய்துகொண்ட பெண்ணை கணவரிடம் இருந்து முறைப்படி திருமணம் செய்து தருவதாக கூறி   அழைத்துச் சென்ற பெண் வீட்டாரிடம் இருந்து மனைவியை மீட்டுத் தரக்கோரி கணவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வீரங்கிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசனின் மகன் கோகுல்ராஜ் 26. இவரும் புதுவயல் கிராமத்தைச் சார்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் நந்தினி ஆகிய இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து தனியாக வசித்துவந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது மாமனார் மணிவண்ணன் வீட்டிற்கு வந்து மகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பின்னர் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அழைத்துச் சென்றார் அதன் பின்னர் இதுநாள் வரை எனது மனைவியை போனிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது குறித்து கேட்டால் நாங்கள் எனது மகளுக்கு வேறு திருமணம் செய்ய உள்ளோம் நீ விவாகரத்து கொடு என வலியுறுத்துகின்றனர் மேலும் அவர்கள் அவர்களது உறவினர் ஜெகன் என்பவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் அந்த அதிகாரத்தை வைத்து என்னை கொன்று விடுவேன் என மிரட்டி வருகிறார் பெண்ணை கொன்று விடுவோம் எனவும் ஆனால் உனக்கு மட்டும் திருமணம் செய்து தர மாட்டோம் எனவும் கூறுவதால் உடனடியாக எனது  எனது மனைவியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீட்டுத் தர வேண்டும் என அறம் திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் தலைமையில் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து  காதலன் கோகுல்ராஜ் மனுவை அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதி அளித்துள்ளார்.