எனக்கு தாய்மொழியை விட ஹிந்தி தான் பிடிக்கும்...அமித்ஷா

எனக்கு தாய்மொழியை விட ஹிந்தி மொழி பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எனக்கு தாய்மொழியை விட ஹிந்தி தான் பிடிக்கும்...அமித்ஷா

உத்திரபிரதேச மாநிலம் வாரணசிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அதனைதொடர்ந்து  இன்று அகில பாரதிய ராஜ்பாஷா சம்மேளன கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,


எனக்கு குஜராத்தி மொழியை விட "இந்தி" மொழி பிடிக்கும்; அனைவரும் சேர்ந்து தேசிய மொழியை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடமும் குழந்தைகளிடமும் தாய் மொழியில் பேசுங்கள்; இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை எனவும் தாய் மொழியில் பேசுவதே நமது பெருமை எனவும் தெரிவித்தார்.

தேசிய மொழிக்கு மத்திய அரசு பல்வேறு வகையில் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்த அமித்ஷா, காந்தி சுதந்திர இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்காக  அவர் பயன்படுத்தியது 3 தூண்கள், அதாவது சுதந்திரம், உள்நாட்டு தயாரிப்பு, அவரவர் மொழி இதில் சுதந்திரம் கிடைத்தது எனவும்

ஆனால் உள்நாட்டு தயாரிப்பு மற்றும் அவரவர் மொழி பேசுதல் போன்ற முன்னெடுப்பு அப்படியே தங்கி விட்டது என்றார். தேசிய மொழிக்கும் தாய் மொழிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்த அமித்ஷா, அவரவர் மொழியை அவரவர் வெட்கம் கொள்ளாமல் பேசலாம் என தெரிவித்தார்.