நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன் - பிடிஆர்

நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன் - பிடிஆர்

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் (FICCI) சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பெண் சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கினார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மேலும் படிக்க|ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம் - மகளிர் தினத்துக்கு சிபிஐ வாழ்த்து

நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன் எனவும் பேச்சு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் FICCI (சென்னை) பெண்கள் பிரிவில்  2022- 2023 ஆம் ஆண்டுக்கான "பெண் சாதனையாளர்கள் விருது" வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
 தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் மரியஜீனா ஜான்சன் கலந்து கொண்டார்....

தொழிலதிபர், வளர்ந்து வரும் தொழில் முனைவோர், தொழிலில் முறை, சமூக தொழில் முனைவோர் NGO,சமூகத் தொழில் முனைவோர் (தனி நபர்) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க| கலை மக்களுக்கானது : பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு முயற்சி - திருமா

பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன்

பெண்களுக்கான உரிமைகளை பெற ஆரம்ப காலத்தில் இருந்து குரல் கொடுத்தோம்.நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன்.பெண்கள் உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.நான் பெருமையுடன் கூறுகிறேன் பெண்களின் முன்னேற்றத்திற்கான அரசாக நமது அரசு உள்ளது.உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு.இதற்கு 100 ஆண்டுகள் உழைப்பு உள்ளது.நீதி கட்சியில் அதற்கான அடிப்படை  தொடங்கியது.ஆண் ,பெண் இருபாலருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது நமது நோக்கம் என்றார்.