மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டு: ரூ.25.56 லட்சம் பறிமுதல்… லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!?  

அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 26 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க-வில் 2016-2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்  எம்.ஆர் விஜயபாஸ்கர்.  இவர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு பல புகார்கள் வந்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலைகளில் ஜி.பி.எஸ் கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத் தொகையை 23 கோடி ரூபாயில் இருந்து 900 கோடி ரூபாயாக உயர்த்தியது தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று (ஜூலை 22) லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், ரூ.25.56 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2016-21ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்துத்துறையில் அதிக ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நேற்று முதல் நடவடிக்கையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.