" தேவை இருந்தால் தாமாக முன்வந்து நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்போம்" - மாநில மனித உரிமைகள் ஆணையம்.

" தேவை  இருந்தால் தாமாக முன்வந்து நாங்குநேரி விவகாரத்தை  விசாரிப்போம்" -   மாநில மனித உரிமைகள் ஆணையம்.

செந்தில் பாலாஜி விவகாரத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமை மீறப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது வரை எந்த பதிலும் அமலாக்க துறை அளிக்கவில்லை. அமலாக்கத்துறை அளிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கலாம்.

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கு புகார் வந்தால் விசாரிப்போம். அதேநேரத்தில் தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை விசாரிக்க தேவை இருப்பது உறுதியாக தெரிந்தால் தாமாகவும் எடுப்போம்.
 
 இதுபோன்ற சம்பவம் சில சமூகங்களில் மட்டும் தென்தமிழகத்தில்  நடக்கின்றன.

தமிழகத்தில் அங்குன்றம் இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து மாநில முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.
சட்ட ஒழுங்கை பொருத்தவரையில் அரசு பார்த்துக்கொள்ளும், காவல்துறை பார்த்துக்கொள்ளும்.

 ஆனால் மாநில அளவில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியும். ‌ தனிப்பட்ட இடத்தில் தனிப்பட்ட காரணங்களால் நடக்கக்கூடிய பிரச்சினைகளை சட்ட ஒழுக்கு பாதிப்பு என்று எண்ண முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல் தொடர்பாக கொரோனா காலத்திலிருந்து 17,000 மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.  இந்த புகார்கள் மீது தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமோ அந்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சமூக நீதி என்பது எல்லோருக்குமானது.
சமூக நீதி காண போராட்டம் என்பது உடனடியாக நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. அது தொடர்ந்து நடைபெற வேண்டியது

என்று மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி அளித்தார்.